Enable Javscript for better performance
சங்கம் ஹோட்டலில் உணவுத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    மதுரை சங்கம் ஹோட்டலில் பர்பிகியூ என்ற இந்திய மற்றும் பன்னாட்டு உணவு வகைகளின் உணவுத் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சங்கம் ஹோட்டல் ரெசிடென்ட் மேலாளர் சத்யேந்திர நாராயண சர்மா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெறும் விழாக்களை ஒருங்கிணைத்து, அந்தந்த பகுதிகளில் சிறப்புக்குரிய உணவு வகைகளை அறிமுகம் செய்யும் வகையில் இந்த உணவுத் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 முதல் இரவு 10.30 வரை உணவுத் திருவிழா நடைபெறும்.

    இதில் சைவ, அசைவ உணவுகளைக் கொண்ட 12 விதமான உணவு வகைகள், விருந்தினர் முன்னிலையில் தந்தூரி மற்றும் தாவா முறையில் உடனுக்குடன் சமைத்து பரிமாறப்படும். மேலும் உணவுக்கு முன் சாப்பிடும் சூப் வகைகளும், உணவுக்குப் பிறகு சாப்பிடும் இனிப்பு வகைகளும் உண்டு. இவற்றை விருப்பம் மற்றும் தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம். இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்க நபர் ஒருவருக்கு ரூ.899 கட்டணமாகப் பெறப்படும் என்றார். ஹோட்டல் துணைப் பொது மேலாளர் ஜி.சுப்பிரமணியன், தலைமை செப் ஆன்ட்ரூ ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai