Enable Javscript for better performance
சிறைத் தண்டனை: இலங்கை மீனவர்களின் மனு தள்ளுபடி - Dinamani

சுடச்சுட

    

    இலங்கை மீனவர்கள் 10 பேருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

    இந்தியக் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் வின்சன் உள்பட 10 பேரை தூத்துக்குடி தெர்மல் நகர் போலீஸார் 2006இல் கைது செய்தனர். இந்த வழக்கை ராமநாதபுரம் நீதிமன்றம் விசாரித்து, 10 பேருக்கும் 15 வாரம் கடும் காவல் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி 10 பேரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர்.

     இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, மனுதாரர்கள் தங்களது தண்டனை காலத்தை முழுமையாக பூர்த்தி செய்து விட்டு இலங்கை சென்று விட்டதால், மனுவை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai