Enable Javscript for better performance
தனிநபர் இல்ல கழிப்பறை குறித்த விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தனிநபர் இல்ல கழிப்பறை குறித்த விழிப்புணர்வு முகாம்

    By உசிலம்பட்டி  |   Published on : 19th September 2015 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் வாய்மை பாரத இயக்கம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

     முகாமில் கல்லூரி முதல்வர் பேசில் சேவியர் வரவேற்றார். மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரோகினி ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:

    தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட வேண்டும், திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்டினால் அரசு மானியமாக 12000- ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. செல்லம்பட்டி ஒன்றியத்தில் 29 கிராம ஊராட்சிகளில் கழிப்பறை இல்லாத 2403 வீடுகளில் கழிப்பறை கட்ட தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

     சடச்சிபட்டி, கட்டகருப்பன்பட்டி, பொட்டுலுபட்டி ஆகிய ஊராட்சிகளில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டவும், திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சியாக மாற்றவும் இக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பாடல், நாடகம் மூலம் பொதுமக்களுக்கு விழ்ப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இதில் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கார்த்திகேயன், பாண்டியம்மாள், கருத்தக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai