Enable Javscript for better performance
நரபலி புகார்: மேலும் 2 பேரின் எலும்புக் கூடுகள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    நரபலி புகார்: மேலும் 2 பேரின் எலும்புக் கூடுகள் மீட்பு

    By மேலூர்  |   Published on : 19th September 2015 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருகே கிரானைட் குவாரிக்காக நரபலி கொடுத்து புதைக்கப்பட்டதாகக் கூறிய புகார் தொடர்பாக, இரண்டாவது முறையாக மயானத்தில் வெள்ளிக்கிழமை தோண்டியபோது மேலும் 2 பேரின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன.

     கிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் சட்ட ஆணையர் உ. சகாயம் கேட்டுக்கொண்டதன்பேரில் இ.மலம்பட்டி மயானத்தில் சற்று ஆழமாகத் தோண்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.  மதுரை வருவாய்க் கோட்டாட்சியர் செந்தில்குமாரி, டிஎஸ்பி மங்களேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் இப் பணி தொடங்கியது. ஏற்கெனவே குழி தோண்டும் பணியில் ஈடுபட்ட மலம்பட்டி கிராமத்தினர், தாங்கள் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மீண்டும் அப்பணியைத் தொடர மறுத்துவிட்டனர். இதன் பிறகு ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களை அழைத்தபோது, அவர்களும் மறுத்து விட்டனர். அதையடுத்து கீழவளவு கிராமத்தில் இருந்து 7 பேர் அழைத்து வரப்பட்டனர்.

     மயானத்தில் ஏற்கெனவே தோண்டிய இடத்தில் 5 அடிக்கு மேல் தோண்டியபோது தனித்தனியாக 2 பேரின் எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டன. மாலை 6 மணியுடன் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் சனிக்கிழமையும் இப்பணி நடைபெறும் என காவல் துறையினர் தெரிவித்தனர். தோண்டும் பணியை சட்ட ஆணையர் உ. சகாயம் நேரில் பார்வையிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai