Enable Javscript for better performance
பெண்களிடம் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மனைவி மணிமேகலை தேவி (22). இவர் மதுரை தெப்பக்குளம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற உறவினர் இல்ல திருமணத்துக்கு வந்தார். மீண்டும் வீடு திரும்புவதற்காக இங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த இருவர், அவர் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    திருப்பரங்குன்றம்: மதுரை சிம்மக்கல் தைக்கால் தெருவைச் சேர்ந்த கருப்பையா மனைவி ராஜாத்தி (50) நெடுங்குளத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல விழாவுக்கு சென்று விட்டு, தம்பி மகன் நாகேந்திரனுடன் பைக்கிதில் திரும்பிக் கொண்டிருந்தார். அவனியாபுரத்தை அடுத்த கஜேந்திரபுரம் அருகே வந்த போது பைக்கில் வந்த இருவர், ராஜாத்தி அணிந்திருந்த சங்கிலியை பறித்தனர். அப்போது பாதி அறுந்த இரண்டரை பவுன் சங்கிலியுடன் மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர்.   அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai