Enable Javscript for better performance
பெருமாள் கோயில்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெருமாள் கோயில்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

    By மதுரை  |   Published on : 19th September 2015 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி (செப்.19) பெருமாள் கோயில்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்த வருவர். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு அளிக்கவும், மதுரை கூடலழகர், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி, திருமோகூர், அழகர்கோவில் கள்ளழகர் கோயில்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த கோயில்களில் தேவைக்கு ஏற்ப தடுப்புகள் அமைத்து பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினருடன் இணைந்து காவல் துறையினரும் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai