Enable Javscript for better performance
மதுரை மாநகராட்சி கட்டட ஜப்தி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாநகராட்சி கட்டட ஜப்தி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை

    By மதுரை  |   Published on : 19th September 2015 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாநகராட்சி கட்டடத்தை ஜப்தி செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக் காலத் தடை விதித்தது.

      மதுரை பீபி குளத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம். இவருக்கு சொந்தமாக மதுரை அண்ணாநகரில் நிலம் இருந்தது. அதில் 95 சென்ட் இடத்தை 1998ஆம் ஆண்டு சாலை அமைக்கும் பணிக்காக மாநகராட்சி கையகப்படுத்தியது. ஆனால், அதற்கு உரிய இழப்பீட்டு தொகையை, அப்துல் ரகீமுக்கு மாநகராட்சி வழங்க வில்லை. இதையடுத்து அவர் இழப்பீட்டுத் தொகை கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், அப்துல்ரகீமுக்கு ரூ.1.59 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் இழப்பீடு வழங்கப்பட வில்லை. பின்னர் வட்டியுடன் ரூ.1.64 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மாநகராட்சி செயல்படுத்த வில்லை.

     இதனால் அவர் மதுரை 6ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிறைவேறுதல் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இழப்பீட்டு தொகைக்காக மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை கட்டடத்தை ஜப்தி செய்ய உத்தர விட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து மதுரை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர்,வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மதுரை மாநகராட்சி கட்டடத்தை ஜப்தி செய்யும் கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai