Enable Javscript for better performance
மேலூரில் விநாயகர் சிலைகளுடன் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    மேலூரில் விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட பாதை வழியாக எடுத்து வர சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வெள்ளிக்கிழமை இந்து மஹா சபாவினர் மறியலில் ஈடுபட்டனர்.

     பின்னர் போலீஸாரின் சமரசத்துக்குப் பின் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.  மேலூரில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு மேலூரிலுள்ள காமாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை மாலை கொண்டு வரப்பட்டன. அப்போது, மேலூர் தினசரி சந்தையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை குறிப்பிட்ட பாதை வழியாக எடுத்து வர சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

     இதைத் தொடர்ந்து, வாகனங்களில் இருந்த விநாயகர் சிலைகள் ஆங்காங்கே இறக்கி வைக்கப்பட்டு செக்கடி பகுதியில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மதுரை ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து மறியல் கை விடப்பட்டது. பின்னர் கூத்தப்பன்பட்டி வரை சென்ற ஊர்வலம் சந்தைப்பேட்டையை வந்தடைந்து, பெரியகடை வீதி அழகர்கோவில் சாலை வழியாக மண்கட்டி தெப்பக்குளத்தை சென்றடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. ஊர்வலத்துக்கு இந்து மஹா சபா மாநிலத் தலைவர் த.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலர் பெரி.செல்லத்துரை முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆர்.ராகவன்ஜீ, மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ்பாண்டியன், ஏ.சங்கன், டி.பரமானந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஸ்ரீவிநாயகர் பக்தர் பேரவை சார்பில் 21ஆவது ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொறுப்பாளர் கிருஷ்ணன், எஸ்.எஸ்.குருசாமி, துணைத் தலைவர்கள் கலைவாணன், ஆட்டோ கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலர் ஆறுமுகம் வரவேற்றார். ஊர்வலத்தை தலைமைக் காவலர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.   நீரேத்தான் ரெங்கசமுத்திரம் கண்மாயில் விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai