Enable Javscript for better performance
ரயில் மீது கல்வீச்சு: ஓட்டுநர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    செங்கோட்டை- மதுரை ரயில் மீது சிறுவர்கள் கல்வீசி தாக்கியதில் வெள்ளிக்கிழமை இன்ஜின் ஓட்டுநர் காயமடைந்தார்.

     செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயில் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை இரவு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. இரவு 7.45 மணிக்கு மதுரை வசந்த நகர் பகுதியில் ரயில் வந்த போது, அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ரயில் மீது கல்லெறிந்துள்ளனர். இதில் ரயில் பாதையை பார்க்க உதவும் முன்புற கண்ணாடி உடைந்து, ஓட்டுநர் சபரிமுத்து (56) முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் உதவி ஓட்டுநர் சபீக் ரயிலை மதுரை ரயில் நிலையத்துக்கு ஓட்டி வந்தார். அங்கு வந்ததும் சபரிமுத்தை சக பணியாளர்கள் மதுரை ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

     இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரயில் ஹாரன் சத்தம் பிடிக்காமல் 3 சிறுவர்கள் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. கல்வீசியவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai