Enable Javscript for better performance
வழக்கு ஆவணங்களை தமிழில் கோர முடியாது:உயர்நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    வழக்கு ஆவணங்களை தமிழில் கோர முடியாது:உயர்நீதிமன்றம்

    By மதுரை  |   Published on : 19th September 2015 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீதிமன்ற வழக்கு ஆவணங்களைத் தமிழில் மாற்றித் தருமாறு கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    மதுரையைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் மீது சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் 2012இல் ஊழல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் ஆவணங்களின் நகல்களை தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு சிபிஐ நீதிமன்றத்தில் கல்யாணசுந்தரம் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவில், வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில் ஆவணங்களின் நகல்களை மனுதாரர் தமிழில் கேட்கிறார். அதை அனுமதிக்க முடியாது என நீதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்து வழக்கு ஆவணங்களை தமிழில் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கல்யாணசுந்தரம் மேல்முறையீடு செய்தார்.

    இம்மனு நீதிபதி எஸ்.விமலா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகல்கள் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களை தமிழில் மொழிபெயர்த்து தருமாறு அவர் கோர முடியாது. ஆவணங்களில் உள்ள விவரங்களை வழக்குரைஞரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai