Enable Javscript for better performance
அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல் - Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல்

    By பேரையூர்  |   Published on : 20th September 2015 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரையூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

     அணைக்கரைப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து பேரையூர் தாலுகா சாப்டூர் காவல் துறை ஆய்வாளர் ராஜசேகர் ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய டிராக்டரை அவர் பறிமுதல் செய்தார். அதன் ஓட்டுநர்களான பாக்கியராஜ் மற்றும் பார்த்திபனை அணைக்கரைப்பட்டி போலீஸார் தேடி வருகின்றனர்.

    மற்றொரு டிராக்டர் பறிமுதல்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா மேலப்பட்டி ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற பேரையூர் வட்டாட்சியர் சிவராம் ஒரு டிராக்டரை பறிமுதல் செய்தார். மேல் நடவடிகைக்காக உசிலம்பட்டி கோட்டாட்சியருக்கு பரிந்துரைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai