Enable Javscript for better performance
கர்ப்பிணி தற்கொலை: தந்தை போலீஸில் புகார்- Dinamani

சுடச்சுட

    

    கர்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில், அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     மதுரை மாவட்டம் தேனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமணி. இவரது மகள் மகேஷ்பிரபா (24). இவருக்கும் மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகன் உள்ளார்.

    இந்நிலையில் மகேஷ்பிரபா கர்ப்பிணியாக இருந்தார். கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் மகேஷ்பிரபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    அவரது சடலத்தை தல்லாகுளம் போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மகேஷ்பிரபாவின் தந்தை, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் தெரிவித்ததையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோட்டாட்சியர் விசாரணையும் நடத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai