Enable Javscript for better performance
குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் திருமுருகன் காலனி பொதுமக்கள்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் திருமுருகன் காலனி பொதுமக்கள்

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 20th September 2015 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநகர் திருமுருகன் காலனி பகுதி வீட்டு குழாய்களில் கடந்த பல மாதங்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

     மதுரை மாநகராட்சி 97ஆவது வார்டுக்குள்பட்டது திருநகரில் உள்ள திருமுருகன் காலனி. இங்கு சுமார் 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இப்பகுதியில் வீடு தோறும் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பல மாதங்களாக குடிநீர் வருவதில்லை. திருப்பரங்குன்றம் பகுதியில் வைகை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழும், திருநகரில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

     ஆனால் திருநகரின் ஒரு பகுதியாக உள்ள திருமுருகன் காலனி பொதுமக்கள் இதில் எந்த குடிநீர் திட்டத்தின் கீழும் தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அவர்கள் லாரி தண்ணீரையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai