Enable Javscript for better performance
கோயில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருநகர் சித்தி விநாயகர் கோயில் முன்பு 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோயில் பணியாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலர் இதயராஜன் தலைமை வகித்தார். இதில், கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் சேது, திருப்பரங்குன்றம் கோயில் பணியாளர்கள் சங்கத் தலைவர் பாலமுருகன், செயலர் புகழேந்தி உள்பட மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோயில், திண்டுக்கல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் பணியாளர்கள் 75-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai