Enable Javscript for better performance
சடலத்தை எடுத்துச் செல்வதில் மோதல்: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சடலத்தை எடுத்துச் செல்வதில் மோதல்: 2 பேர் கைது

    By வாடிப்பட்டி  |   Published on : 20th September 2015 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சோழவந்தான் அருகே சடலத்தை எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

     சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (45). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார். இவரது சடலத்தை பிரதான சாலை வழியாக அவரது உறவினர்கள் எடுத்துச் சென்றனர். அப்போது சார்லஸ் என்ற கருப்புச்சாமி உள்பட 5 பேர் வழிமறித்து  தகராறு செய்துள்ளனர். தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததால் சார்லஸ் என்ற கருப்புச்சாமி உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சடலத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai