Enable Javscript for better performance
திருமங்கலம், மேலூரில் விநாயகர் சிலை ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலம், மேலூரில் விநாயகர் சிலை ஊர்வலம்

    By திருமங்கலம்  |   Published on : 20th September 2015 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமங்கலத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளின் ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

     விநாயகர் சதுர்த்தியையொட்டி பச்சக்கோப்பன்பட்டி, மேலஉரப்பனூர், கப்பலூர் மற்றும் திருமங்கலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வந்தன.  அந்த சிலைகளை ஆற்றில் கரைப்பதற்காக சனிக்கிழமை திருமங்கலம் ஜவஹர் ரவுண்டானாவுக்கு கொண்டு வரப்பட்டன.

     அங்கிருந்து மதுரை சாலை, பேருந்து நிலையம், உசிலம்பட்டி சாலை மற்றும் சந்தைப்பேட்டை வழியாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் குண்டாற்றில் கரைக்கப்பட்டன.

    திருமங்கலம் இணை காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன் தலைமையில் நகர் காவல் ஆய்வாளர் எஸ்.அன்னராஜ், தாலுகா காவல் ஆய்வாளர் வி.குருவெங்கட்ராஜ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலூர்:  மேலூரில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 38 விநாயகர் சிலைகள் மேலூர் காமாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக மண்கட்டி தெப்பக்குளத்தை வந்தடைந்தது. அங்கு சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.

     ஊர்வலத்தை இந்து முன்னணி மதுரை மாவட்ட பொதுச்செயலர் குருஜி ராமச்சந்திரன், புறநகர் மாவட்ட செயலர் செந்தூர் செல்வம், பாஜக துணைச் செயலர் அண்ணாதுரை,  ஆகியோர் முன்னிலையில், விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன் தொடங்கி வைத்தார். இந்து முன்னணி மாநில பேச்சாளர் நெல்லை காந்திமதிநாதன் சிறப்புரையாற்றினார்.

     புறநகர் மாவட்ட செயலர் பி.சிவா, மேலூர் நிர்வாகிகள் கே.திருப்பதி, ஆர்.குருநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி மேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai