Enable Javscript for better performance
தீ விளையாட்டை பார்த்த பாட்டி, பேரன் தீக்காயம்- Dinamani

சுடச்சுட

    

    தீ விளையாட்டை பார்த்த பாட்டி, பேரன் தீக்காயம்

    By திருமங்கலம்  |   Published on : 20th September 2015 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமங்கலம் சிந்துபட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கட்டத்தேவன்பட்டியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கட்டத்தேவன்பட்டியைச் சேர்ந்த காட்டுராஜா (23) வாயில் மண்ணெண்ணெயை ஊற்றி தீப் பந்தத்தில் ஊதி, தீ விளையாட்டு காட்டியபடி வந்தார். இதை வேடிக்கை பார்ப்பதற்காக சாலை ஓரத்தில் அதே ஊரைச் சேர்ந்த பவுனம்மாள், தனது ஒன்றரை வயது பேரன் ரித்திஷ் என்ற ஒச்சுவை தூக்கிய படி நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக காட்டுராஜா ஊதிய தீ, பவுனம்மாள் மற்றும் அவரது பேரன் ரித்தீஷ் மீது பட்டு தீப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது பற்றி போலீஸார் விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai