Enable Javscript for better performance
நரபலி புகார்: புதைகுழியை தோண்டும் பணி தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    நரபலியிடப்பட்ட இருவர் சடலம் புதைக்கப்பட்டதாக கூறப்படும் புதைகுழியை தோண்டும் பணி ஞாயிற்றுக்கிழமையும் தொடரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    கிரானைட் குவாரியில் மனநலம் பாதிக்கப்பட்ட இருவர் நரபலியிடப்பட்டு, இ.மலம்பட்டி மயானத்தில் புதைக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, அந்த இடத்தை தோண்டும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஒரு குழந்தையின் எலும்புக்கூடு உள்ளிட்ட 4 எலும்புக்கூடுகள் அங்கிருந்து மீட்கப்பட்டன. இந்நிலையில், புதைகுழியை மேலும் தோண்ட முடிவு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை மேலும் இருவரது எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. சனிக்கிழமையும்  தோண்டும் பணி தொடர்ந்தது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த பணி மாலை 5.30 மணிக்கு நிறுத்தப்பட்டது.  புதைகுழியின் ஒருபகுதி 9.5 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது. மீதி பகுதியை ஞாயிற்றுக்கிழமை தோண்டவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மதுரை ஆர்டிஓ செந்தில்குமாரி, காவல் துணை கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன், வட்டாட்சியர் கிருஷ்ணன், மருத்துவர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் குழி தோண்டப்படும் இடத்தில் இருந்தனர். மயானத்தில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai