புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கைது
By மதுரை | Published on : 20th September 2015 08:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மதுரையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 54 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் கடந்த வாரம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் விதியை மீறியதாக போலீஸார் வழக்குப்பதிந்தனர்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்ததைக் கண்டித்து அக்கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலர் பாஸ்கரன் தலைமையில் தென்மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனர்.
பின்னர் திடீரென பொய் வழக்கு பதிந்ததாகவும், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் பாஸ்கரன், முனியாண்டி, சிற்றரசு உள்ளிட்ட 54 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.