Enable Javscript for better performance
பெருமாள் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள்- Dinamani

சுடச்சுட

    

    புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி மதுரையிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மதுரை கூடலழகர் பெருமாள், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் ஆகியவற்றில் சனிக்கிழமை அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். அவர்கள் துளசி மாலையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், பிராட்டியாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில்களில் சக்கரத்தாழ்வார், தாயார் சன்னதிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மதுரை கிருஷ்ணன் கோயில், மேலமாசி வீதியிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோயில், மதுரை அருகேயுள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், அழகர்கோயில் மற்றும் சோழவந்தான் குருவித்துறை பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்கள் கோயில் காளை மற்றும் பசு மாடுகளுக்கு அகத்திக்கீரையை நேர்த்திக்கடனாக கொடுத்தனர்.

     இதனால் பெருமாள் கோயில் பகுதியில் துளசி மாலை, அகத்திக்கீரை விற்பனை மும்முரமாக இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai