Enable Javscript for better performance
பேரையூர் அருகே கிராம மக்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பேரையூர் அருகே போலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

     மதுரை மாவட்டம்  எழுமலையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்கத்து கிராமங்களிலிருந்து சிலைகள் எடுத்து வரப்பட்டு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. அதில் எழுமலை அருகேயுள்ள சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது விநாயகர் சிலையுடன் கலந்து கொண்டனராம். அப்போது காவல் துறையினர் சிலர் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் விநாயகர் சிலையை கரைக்க மறுத்து சங்கரலிங்காபுரத்தில் போராட்டம் நடத்தினர்.

    அப்போது அவர்கள்  சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரினர். இதையறிந்த பேரையூர் வட்டாட்சியர் சிவராம், சங்கரலிங்காபுரம் சென்று சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai