Enable Javscript for better performance
மாணவர் முகத்தில் மயக்க மருந்து தெளித்து நகை கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    மாணவர் முகத்தில் மயக்க மருந்து தெளித்து நகை கொள்ளை

    By மதுரை  |   Published on : 20th September 2015 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் வீட்டுக்குள் புகுந்து மாணவர் முகத்தில் மயக்க மருந்து தெளித்து நகை, செல்லிடப் பேசியை மர்மநபர் கொள்ளையடித்து சென்றதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

     மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாலகுரு (18). தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை பகலில் அவர் வீட்டில் இருந்த போது மர்மநபர் உள்ளே புகுந்து அவரது முகத்தில் மயக்க மருந்தை தெளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாலகுரு மயக்கமடைந்தார். பின்னர் அந்த மர்ம நபர் வீட்டிலிருந்த 4 பவுன் நகைகள், 3 செல்லிடப் பேசிகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று விட்டாராம்.  இதுகுறித்து தெற்குவாசல் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai