Enable Javscript for better performance
முக்தீஸ்வரர் கோயிலின் கர்ப்ப கிரகத்தில் சூரியக் கதிர்கள்- Dinamani

சுடச்சுட

    

    முக்தீஸ்வரர் கோயிலின் கர்ப்ப கிரகத்தில் சூரியக் கதிர்கள்

    By மதுரை  |   Published on : 20th September 2015 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலின் கர்ப்ப கிரகத்துக்குள் சூரியக் கதிர்கள் விழும் நிகழ்வு செப். 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

     இதுகுறித்து மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நா.நடராஜன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:  மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலின் உபகோயிலான தெப்பக்குளம் மரகதவல்லி அம்பிகை உடனுறை முக்தீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை (செப்.19) முதல் செப். 30ஆம் தேதி வரை தினசரி காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரை நேரடியாக கர்ப்பக் கிரகத்துக்குள் சூரியக் கதிர்கள் சுவாமி மீதும், பின்னர் காலை 6.40 மணி முதல் 6.50 மணி வரை சுவாமி சன்னதி மண்டபத்தின் துவாரம் வழியாக கருவறைக்குள்ளும் பிரவேசிக்கும்.

     சூரியக் கதிர்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் நேரடியாகப் பிரவேசிக்கும் நேரத்தில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai