Enable Javscript for better performance
ராமானுஜரின் அவதார விழாவையொட்டி ஆன்மிக சொற்பொழிவு- Dinamani

சுடச்சுட

    

    ராமானுஜரின் அவதார விழாவையொட்டி ஆன்மிக சொற்பொழிவு

    By வாடிப்பட்டி  |   Published on : 20th September 2015 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாடிப்பட்டியில் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு அவதார விழாவையொட்டி ஆன்மிக சொற்பொழிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இது 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

     உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், தொழில் மற்றும் விவசாய முன்னேற்றத்துக்காகவும் நீரேத்தான் இரட்டை பிள்ளையார் கோயில் அருகே திருமலை திருப்பதியின் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி ஸ்ரீராமானுஜரின் 1000ஆவது ஆண்டு அவதார வைபவ உபந்யாஸம் ஆன்மிக சொற்பொழிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த விழா 28ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

    இந்நிகழ்ச்சியை மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், கம்பன் கழகத் தலைவர் புலவர் நா.அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்ரீபகவத் ராமானுஜரின் திவ்யமான சரித்திர உபந்யாச சொற்பொழிவினை, மதுரை அழகர்கோவில் கோமடம் உ.வே.ஸ்ரீஸ்ரீமுகுந்தாச்சாரியார் சுவாமிகள் தினந்தோறும் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நிகழ்த்துகிறார். 28ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகண்டநாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai