Enable Javscript for better performance
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு:ஆய்வு செய்ய 10 குழுக்கள் அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு:ஆய்வு செய்ய 10 குழுக்கள் அமைப்பு

    By மதுரை,  |   Published on : 21st September 2015 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க 10 ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக, மதுரையை உருவாக்குவதற்கான செயல் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மதுரை வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமாரி, தொழிலாளர் இணை ஆணையர் சரவணன், தொழிலாளர் ஆய்வாளர் (பொறுப்பு) பா.சாந்தி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தனசேகரன், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் கு.பார்வதி, குழந்தைகள் பாதுகாப்புக் குழுத் தலைவர் ஜிம் ஜேசுதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மதுரையை உருவாக்கும் வகையில் ஊடகங்கள் மூலமாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தால் அவர்களை மீட்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் 10 ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் திடீர் ஆய்வுகள் மேற்கொள்வர் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai