Enable Javscript for better performance
குழந்தை நல அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு: 2809 பேர் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தை நல அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு: 2809 பேர் எழுதினர்

    By மதுரை,  |   Published on : 21st September 2015 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வை மதுரையில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் 2,809 பேர் எழுதினர்.

    சுகாதாரத் துறையில் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 89 மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர் நேரடி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. மதுரையில் 11 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்வுக்கு 3,502 பேர் விண்ணப்பித்திருந்தனர். காலை, மாலை என இரு தேர்வுகளில் 2809 பேர் பங்கேற்றனர். 693 பேர் தேர்வு எழுத வரவில்லை. அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பெருமாள்சாமி, தேர்வு மையங்களை நேரடியாகப் பார்வையிட்டார். தேர்வு மைய கண்காணிப்புப் பணியில் கல்வி, வருவாய்த் துறையினருடன் அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai