Enable Javscript for better performance
திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் மேயர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் மேயர் ஆய்வு

    By திருப்பரங்குன்றம்,  |   Published on : 21st September 2015 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் சாலை, குடிநீர் வசதிகள் குறித்து மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

    மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 95, 96, 97, 98 ஆகிய வார்டு பகுதிகளான திருநகர் மகாலெட்சுமி காலனி, சீனிவாசா நகர், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.

    ஆய்வு குறித்து அவர் கூறியதாவது:

    பழுதான சாலைகள் ஒரு மாதத்துக்குள் சரி செய்யப்படும். மேலும் குடிநீர் கிடைக்காத பகுதிகளில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

    உதவி ஆணையர் சாந்தி, நகர பொறியாளர் மதுரம், மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து, மாமன்ற உறுப்பினர்கள் முத்துக்குமார், ஹமிதா அக்பர்அலி, நாகலெட்சுமி பாண்டுரங்கன், சந்தியா பலராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai