Enable Javscript for better performance
தென்பழஞ்சி, வேலாம்பூரில் \\\"அம்மா\\\' திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தென்பழஞ்சி, வேலாம்பூரில் "அம்மா' திட்ட முகாம்

    By திருப்பரங்குன்றம்,  |   Published on : 21st September 2015 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தென்பழஞ்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

    முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் விமலா வைரமணி தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் வரவேற்றார். முகாமில் சமூக நலப் பிரிவு வட்டாட்சியர் ராஜூ மனுக்களை பெற்றார். பட்டா, முதியோர் உதவித்தொகை, பசுமை இல்லம் கோரி 270 பேர் மனுக்கள் கொடுத்தனர்.

    இதில் 175 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. குடிமைப்பிரிவு வட்டாட்சியர் கோபிநாத், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் குணசேகரன், சாக்கிலிபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    வேலாம்பூரில்...

    பேரையூர் தாலுகா வேலாம்பூரில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

    இம்முகாமில் பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான மனுக்கள், முதியோர் மற்றும் விதவைகள் உதவித் தொகைக்கான மனுக்கள், வருமானச் சான்று, சாதிச் சான்று, புதிய குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான மனுக்கள் என 221 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 179 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பேரையூர் வட்டாட்சியர் எஸ்.சிவராம், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் எஸ்.கருப்பையா, வருவாய் ஆய்வாளர் கருப்பையா மற்றும் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai