Enable Javscript for better performance
நவீன மருத்துவ வசதிகள் கிராமங்களை அடைய வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    நவீன மருத்துவ வசதிகள் கிராமங்களில் கிடைக்க வேண்டும் என்று மதுரையில் நடந்த மருத்துவக் கல்வி கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

    பொது மருத்துவத் துறை முன்னேற்றம் குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நரம்பியல் துறை பேராசிரியர் டாக்டர் ஸ்ரீனிவாசன் பேசியதாவது:

    காலரா, பெரியம்மை, சின்னம்மை, நிமோனியா, பிளேக் போன்ற தொற்று நோய்களால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. பின்னர் நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் காரணமாக இந்நோய்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. அதே நேரம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்து வருகிறது. 6 மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய் பாதிப்பை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

    நாட்டின் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் கிராமங்களில் வசிக்கின்றனர். அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஆரம்ப கட்ட பரிசோதனைகளை செய்து நோய்கள் வரும் முன் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    அதே நேரம், நவீன மருத்துவ வசதிகள் கிராமங்களைச் சென்றடைவது அவசியம் என்றார்.

    மதுரை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் பாலாஜிநாதன், தர்மராஜ், இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மீனாட்சி மிஷன் மருத்துவமனை கிளைத் தலைவர் குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai