Enable Javscript for better performance
நேதாஜி குறித்த ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்: வைகோ- Dinamani

சுடச்சுட

    

    நேதாஜி குறித்த ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்: வைகோ

    By திருப்பரங்குன்றம்,  |   Published on : 21st September 2015 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

    சென்னையிலிருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

    விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெளியிட்டுவிட்டது. இதேபோல், மத்திய அரசிடம் உள்ள நேதாஜி குறித்த ஆவணங்களையும் வெளியிட வேண்டும்.

    நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிடாமல்ஜ் ரஷ்ய அரசின் ராஜீய உறவுக்காக அவரின் இறப்பை மறைத்தவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்.

    மேலும் தலித்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை. டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா நேர்மையான அதிகாரி. கோகுல்ராஜின் மரணம் குறித்து விசாரணை செய்த அவருக்கு மேலதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

    அவர் இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    பின்னர் அவர் கார் மூலம் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக வைகோவிற்கு மதுரை விமான நிலையத்தில் மதிமுக மாவட்ட செயலர் பூமிநாதன் தலைமையில் அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பளித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai