Enable Javscript for better performance
விபத்தில் காயமடைந்தவருக்கு செயற்கை ரத்தக் குழாய் சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் காயமடைந்தவருக்கு செயற்கை ரத்தக் குழாய் சிகிச்சை

    By மதுரை,  |   Published on : 21st September 2015 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விபத்தில் காயமடைந்தவருக்கு மிக நுட்பமான அறுவைச் சிகிச்சை மூலம் மதுரை வடமலையான் மருத்துவமனையில் செயற்கை ரத்தக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அம்மருத்துவமனையின் இருதய மற்றும் நுரையீரல் அறுவைச் சிகிச்சை மருத்துவர் பி.பாபு செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளிசந்தர் (33). தொழிலதிபர். கடந்த ஜூனில் ஒட்டன்சத்திரம் அருகே காரில் சென்ற போது எதிரே வந்த வாகனம் மோதி காயமடைந்தார்.

    விபத்தில் அவரது ரத்தக் குழாயில் (பெருந்தமணி) பாதிக்கப்பட்டது. இதயத்திலிருந்து மூளை உள்ளிட்ட உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமணி குழாயில் இந்த பாதிப்பு இருந்தது.

    வடமலையான் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட அவருக்கு மிக நுட்பமான முறையில் மயக்கவியல் பிரிவு மருத்துவர் டி.செந்தில்குமார் உதவியுடன் 5 மணி நேரம் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 7 செ.மீட்டர் அளவுக்கு செயற்கை ரத்தக் குழாய் பொருத்தப்பட்டது. உடல் உறுப்புகளுக்கு அதிகமாக ரத்தம் அளிக்கும் குழாயில் இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

    சிகிச்சை பெற்ற தொழிலதிபர் முரளிசந்தர் தான் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். அப்போது வடமலையான் மருத்துவமனை மருத்துவ இயக்குநர் வி.பாப்புநாதன் உடனிருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai