விளாங்குடியில் மறியல்:36 பேர் கைது
By மதுரை, | Published on : 21st September 2015 03:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மருதுபாண்டியர்கள் உருவப்படம் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து மதுரையை அடுத்த விளாங்குடியில் மறியலில் ஈடுபட்ட தென்னிந்திய பார்வர்டு பிளாக் அமைப்பினர் 36 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மருதுபாண்டியர்கள் படத்தை அவமதிப்பு செய்தவர்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி தென்னிந்திய பார்வர்டு பிளாக் மற்றும் விளாங்குடி முக்குலத்தோர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 36 பேரை, கூடல்புதூர் போலீஸார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.