Enable Javscript for better performance
வீடுகளுக்குள் புகுந்து நகை,பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் இரு இடங்களில் வீடு புகுந்து நகை, பணம் திருடியவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

    மதுரை கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் உஷாநந்தினி (40). தனியார் பள்ளி ஆசிரியை. கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் நடந்த உறவினரின் திருமணத்துக்காக வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றார். சனிக்கிழமை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்து 6 பவுன் நகை, ரூ.9 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து உஷாநந்தினி கொடுத்த புகாரின் பேரில், தல்லாகுளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

    மற்றொரு சம்பவம்: கோமதிபுரம் 6ஆவது வீதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (54). இவர் சனிக்கிழமை வெளியே சென்றிருந்த போது, வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த மூன்றரை கிலோ வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai