Enable Javscript for better performance
அட்டாக் பாண்டியை ஆஜர்படுத்தக்கோரி மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    அட்டாக் பாண்டியை ஆஜர்படுத்தக்கோரி மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல்

    By மதுரை  |   Published on : 22nd September 2015 06:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    என்கவுண்டரில் கொன்றுவிடும் ஆபத்து உள்ளதால் அட்டாக் பாண்டியை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி அவரது மனைவி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

      அட்டாக்பாண்டி மனைவி தயாளு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு: நிலப்பறிப்பு வழக்கு சம்பந்தமாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் என் கணவரை போலீசார் தொந்தரவு செய்தனர். இதன்காரணமாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார். 2013 ஆம் ஆண்டு பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் என் கணவரை குற்றவாளியாக போலீசார் சேர்த்தனர். இதைதொடர்ந்து, போலீசார் தன்னை என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் வீட்டுக்கு வராமல் தலைமறைவாகினார். போலீசார் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் என் வீட்டுக்கு வந்து, என் கணவரை ஒப்படைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும், நாங்களாக பிடித்தால் என்கவுண்டர் செய்து விடுவோம் என்றும் மிரட்டினர். அவரை பிடிக்க முடியாததால் என் மீதும், என் தந்தை மீதும் பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். என் கணவரை கைது செய்தது தொடர்பாக  போலீசார் இதுவரை அதிகாரப்பூர்வமாக எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. என் கணவர் சார்ந்துள்ள கட்சியை சேர்ந்தவர்களுக்கு பொட்டுசுரேஷ் கொலையில் தொடர்பு இருப்பதாக மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கவும், அவர்களைக் கொலை வழக்கில் சேர்க்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அப்படி வாக்குமூலம் அளிக்க என் கணவர் மறுக்கும்பட்சத்தில் அவரை என்கவுண்டர் என்ற பெயரில் போலீஸார் கொலை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, என் கணவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மராட்டிய மாநில டி.ஜி.பி., தமிழக டி.ஜி.பி., மதுரை மாநகர் காவல் ஆணையர் ஆகியோருக்கு அவசர மனு அனுப்பி உள்ளேன். மதுரை நீதிமன்றத்தில் என் கணவரை ஆஜர்படுத்தும்வரை அவரை எந்தவித தொந்தரவு செய்யக்கூடாது என்றும், சித்ரவதை செய்யக்கூடாது என்றும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். அவரை, சட்டவிரோத காவலில் போலீசார் வைத்துள்ளதால் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai