Enable Javscript for better performance
அரசு பஸ் மீது கல்வீச்சு- Dinamani

சுடச்சுட

    

    அரசு பஸ் மீது கல்வீசிய 3 மர்மநபர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

     மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலையில் அலங்காநல்லூர் பகுதிக்கு அரசு பஸ் சென்றது. பஸ்ஸை ஓட்டுநர் பாண்டி ஓட்டிச்சென்றார். அப்போது கூடல்நகர் பகுதியில் அலங்காநல்லூர் சாலையில் பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென கற்களை வீசினர். இதில் பஸ்ஸின் முன்பக்கக் கண்ணாடி சேதமடைந்தது. இதுகுறித்து ஓட்டுநர் பாண்டி அளித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai