Enable Javscript for better performance
ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 பேர் தீக்குளிக்க முயன்ற்சி- Dinamani

சுடச்சுட

    

    ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 பேர் தீக்குளிக்க முயன்ற்சி

    By மதுரை  |   Published on : 22nd September 2015 06:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

     விரகனூர் கீழத்தெருவைச் சேர்ந்த ஏராளமானோர் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அவர்களில் தட்சிணாமூர்த்தி என்ற இளைஞரும், பிரசன்னா என்ற மாணவரும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீஸார் இருவரையும் மீட்டு போலீஸ் வேனில் ஏற்றிச்சென்றனர். அப்போது வேன் முன்பு அனுப்பானடி பகுதியினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

     தீக்குளிக்க முயன்றவர்கள் கூறுகையில், விரகனூர் பகுதியில் தனியார் கார் எரிந்தது தொடர்பாக சிலைமான் போலீஸார் ஒருதலைப்பட்சமாக விசாரித்துவருகின்றனர். கோயில் நிலத்தை ஆக்கிரமித்த ஒருவர் அளித்த பொய்ப்புகாரின் பேரிலே விசாரணை நடத்தப்படுகிறது. ஆகவே நடுநிலையோடு போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai