Enable Javscript for better performance
இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மட்டுமே தீர்வாக இருக்கும்: தொல்.திருமாவளவன்- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மட்டுமே தீர்வாக இருக்கும்: தொல்.திருமாவளவன்

    By மதுரை  |   Published on : 22nd September 2015 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை இனப்படுகொலைக்கு சுதந்திரமான, நம்பகமான அமைப்பின் மூலம் சர்வதேச விசாரணை நடத்துவதே முழுமையான தீர்வாக இருக்கும் என்று என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

     இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மதுரை அண்ணா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:

     இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சுதந்திரமான, நம்பகமான அமைப்பின் மூலம் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் இதைத் தான் வலியுறுத்துகின்றனர். இருப்பினும் ஐநா மனித உரிமை ஆணையர் பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு நீதிமன்றம் அமைத்து உள்ளூர் சட்டத்தில் விசாரணை நடத்த பரிந்துரை செய்துள்ளார். இதன் அடிப்படையிலேயே அமெரிக்காவின் வரைவு தீர்மானமும் அமைந்துள்ளது. இதை சீனா, பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

     ஐநா மனித உரிமை ஆணையரின் பரிந்துரையும், அமெரிக்காவின் வரைவு தீர்மானமும் தமிழர்களுக்கு நியாயத்தை அளிக்காது. இலங்கை நடத்திய இனப்படுகொலைக்கு சுதந்திரமான, நம்பகமான அமைப்பின் மூலம் சர்வதேச விசாரணை தான் முழுமையான தீர்வாக இருக்கும். இந்த சர்வதேச விசாரணையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

     டிஎஸ்பி தற்கொலை விவகாரம்...: தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில், காவல் துறையில் பணியாற்றும் 216 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

     நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலையில், பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவரது பெற்றோரும், மனித உரிமை அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன. இச்சூழலில் தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது ஏற்புடையதல்ல. விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

     உயர் அதிகாரிகளின் தொந்தரவு தாங்க முடியாமல் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இதேபோல பல அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகளில் தொந்தரவு தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் மற்றொரு டிஎஸ்பி மகேஸ்வரி கூறியிருக்கிறார். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் விஷ்ணுபிரியா உள்ளிட்ட காவல் துறையினரின் தற்கொலைகள் தொடர்பாக நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.

     விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர்கள் அன்பழகன், செல்லபாண்டியன், அய்யங்காளை, தலைமை நிலையச் செயலர் ஆற்றலரசு, மாநிலத் துணைப் பொதுச் செயலர் கனியமுதன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai