Enable Javscript for better performance
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றக்கோரும் வழக்கு: உயர்நீதிமன்றம் தலையிடமறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றக்கோரும் வழக்கு: உயர்நீதிமன்றம் தலையிடமறுப்பு

    By மதுரை  |   Published on : 22nd September 2015 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத்திட்டம் அரசின் கொள்கை முடிவு என்று கூறி, திட்டத்தை நிறைவேற்றக்கோரும் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை முடித்து வைத்தது.

      மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த எம்.சுந்தரராஜ் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டம் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தில் தமிழக அரசிடம் கேட்டேன். அதில், திட்டத்துக்கு 258 கிலோ மீட்டர் தூர இணைப்பு கால்வாய் அமைக்கப்படும் என்றும் ரூ.5166 கோடி மதிப்பில் திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்து தமிழக முதல்வர் 2014 இல் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு இத்திட்டத்துக்கான மதிப்பீடு 2673 கோடியாக இருந்தது.தற்போது இந்த திட்ட மதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது. எனவே திட்டத்துக்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார். இம்மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் நீர் ஆணைய இயக்குநர் அழகேசன் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழக அரசு இத்திட்டம் குறித்த வரைவு அறிக்கையை 2012 இல் தாக்கல் செய்தது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படி அந்த அறிக்கை தயார் செய்யப்படவில்லை. எனவே திருத்தப்பட்ட வரைவு அறிக்கை அனுப்புமாறு தமிழக அரசிடம் மத்திய அரசு கோரியது. இன்னும் திட்டத்தை தமிழக அரசு மாற்றித்தரவில்லை. எனவே மத்திய அரசு இதில் எதுவும் செய்ய முடியாது. மேலும் இது அரசின் கொள்கை சம்பந்தமான முடிவு என குறிப்பிடப்பட்டிருந்தது.

     இந்நிலையில் இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் இதில் உத்தரவு எதுவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக்கூறி மனு மீதான விசாரணையை முடித்து வைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai