Enable Javscript for better performance
செப். 26 இல் தமிழிசைச் சங்க இசை,பேச்சுப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    தமிழிசைச் சங்க இசை மற்றும் பேச்சுப்போட்டிகள் சனிக்கிழமை (செப்.26) நடைபெற உள்ளது.

     டாக்டர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் 135 ஆவது பிறந்தநாள் செப்.30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இசை மற்றும் பேச்சுப்போட்டிகள் செப்.26ஆம் தேதி நடத்தப்பட உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளி அல்லது கல்லூரி முதல்வர் சான்றிதழுடன் விண்ணப்பங்களை புதனகிழமைக்குள் (செப்.23) தமிழ் இசைச்சங்கம், ராஜாமுத்தையா மன்றம், அம்பேத்கார் சாலை,மதுரை-20 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு செப்.30ஆம் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். தமிழிசைச்சங்க செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai