Enable Javscript for better performance
தென் மண்டலத்தில் 74 இ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் வசதி அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    தென் மண்டலத்தில் 74 இ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் வசதி அறிமுகம்

    By  மதுரை  |   Published on : 22nd September 2015 06:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின்கீழ் 9 மாவட்டங்களில் உள்ள 74 இ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.மணீஸ்வரராஜா ஆகியோர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

     மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின்கீழ் உள்ள மதுரை மற்றும் திருநெல்வேலி பாஸ்போர்ட் சேவை மையங்கள் மூலமாக தினமும் 1300 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்தி, நேர்காணலுக்கான தேதியை முன்பதிவு பெற வேண்டும். மேற்படி தேதியில் பாஸ்போர்ட் சேவை மையத்தில் அனைத்து சான்றிதழ்களுடன் சென்று விண்ணப்பம் பரிந்துரை செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ளலாம்.

     ஆன்லைனில் பதிவு செய்வதில் விண்ணப்பதாரர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

    பாஸ்போர்ட் வலைதளத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க 10 நிலைகளைக் கடந்து, முன்பதிவு எண் மற்றும் தேதி அடங்கிய ஏ.ஆர்.எண். சீட்டு எடுப்பதில் விண்ணப்பதாரர்கள் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

    இதை நிவர்த்தி செய்யும் வகையில், தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ.சேவை மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

     மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் செயல்படும் 74 இ.சேவை மையங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.

     தட்கல் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்போது, குடிமைப்பணி அதிகாரிகளின் பரிந்துரைக் கடிதம் இணைப்பது அவசியம். சான்றொப்பத்தை விண்ணப்பத்திலேயே  பெறாமல், சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் லெட்டர் ஹெட்-இல் பெற்று இணைக்க வேண்டும் என்று பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai