Enable Javscript for better performance
மக்கள் நீதிமன்றத்தில் 200 வழக்குகள் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மக்கள் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை 200வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

      மதுரை மாவட்ட வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி ராகவன் உத்தரவின்பேரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் இந்த மக்கள் மன்றம்  நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதி மாயாண்டி தலைமையில் வழக்குரைஞர் முத்துக்குமார் மற்றும் சமூக ஆர்வலர் ஆர்தர் ஆகியோர் கொண்ட குழுவினர் வழக்குகளை விசாரித்தனர். இதில் தனியார் வங்கிகள் தொடர்பான 200 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மதுரையை சேர்ந்த காளிமுத்து மகன் சரவணக்குமார் என்பவர் ஒரு தனியார் வங்கி கடன் அட்டை மூலம் ரூ.88,627 செலவு செய்த தொகையை வங்கிக்கு செலுத்தாததால் தொடரப்பட்ட வழக்கில் தீர்வு காணப்பட்டது. இதுபோன்று பல வழக்குகளில் சுமூக தீர்வு காணப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai