மதுரை: மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
By மதுரை | Published on : 22nd September 2015 06:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஈழத்தமிழர் படுகொலைக்கு நீதி கேட்டும், சர்வதேச விசாரணை நடத்தக்கோரியும் மதுரையில் மதிமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈழத்தமிழர்கள் கடந்த 2009-ல் அந்நாட்டு ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதற்கு சர்வதேச நீதிவிசாரணை மூலம் நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனக் கோரி மதிமுக சார்பில் மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக அரசியல் ஆய்வு மையச் செயலர் மு.செந்தில் தலைமை வகித்தார். மதிமுக மதுரை மாநகர் மாவட்டச்செயலர் புதூர் மு.பூமிநாதன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.டி.சின்னச்செல்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மதிமுக புறநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள் கதிரேசன் (தெற்கு), மார்நாடு (வடக்கு)மற்றும் மாநிலத் தொழிற்சங்க செயலர் மகபூப்ஜான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ரயில் மறியல் முயற்சி: ஈழத்தமிழர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பாரதி என்பவர் தலைமையில் ரயில் மறியலுக்கு முயன்ற 75 பேரை திலகர்திடல் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை விடுவித்தகாகப் போலீஸார் கூறினர்.