Enable Javscript for better performance
மதுரை மருத்துவமனையில் நவீன நுண்ணோக்கி அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மருத்துவமனையில் நவீன நுண்ணோக்கி அறிமுகம்

    By மதுரை  |   Published on : 22nd September 2015 06:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான நவீன நுண்ணோக்கி நிறுவப்பட்டுள்ளது.

     இது குறித்து மருத்துவனை நிறுவனர் எம்.ஜெ.அருண்குமார் கூறியது: மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைத்துறையில் எங்கள் மருத்துவமனை கடந்த 8 ஆண்டுகளாக சேவை செய்கிறது. இதில் சர்வதேச அளவிலான தரம் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏராளமானோர் அறுவை சிகிச்சை செய்து பலனடைந்துள்ளனர். மூளை மற்றும் முதுகுதண்டு வட கட்டி, ரத்தநாள வீக்கம், தண்டுவட குறைபாடு, கபாலத்தில் ஏற்படும் மூளை கட்டிகள் போன்ற குறைபாடுகளை சரி செய்ய கடினமான அறுவை சிகிச்சை முறை நடமுறையில் உள்ளது. இதை எளிமையாக்கும் வகையிலான ஓபிஎம்ஐ பென்டிரோ 900 என்ற ஜெர்மனி நாட்டின் அதிநவீன  நுண்ணோக்கி மருத்துவனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் உள்ள வசதிகள் அறுவை சிகிச்சை நிபுணரின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.மூளைக்கட்டிகளை தெளிவாகக் காணவும், க்ளைமாஸ் எனப்படும் கட்டிகளை முழுதுமாக அகற்றவும் இது உதவும். அறுவை சிகிச்சை செய்து கொள்வோர் விரைவாக குணம் அடைய ஏதுவாகவும் இருக்கும். இந்த நுண்ணோக்கி ரூ.2 கோடி விலை மதிப்பு கொண்டது.இருப்பினும் நோயாளிகள் இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டியதில்லை என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai