Enable Javscript for better performance
மருத்துவக்கல்லூரி தடயவியல்துறை தலைவர் இடமாறுதல் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவக்கல்லூரி தடயவியல்துறை தலைவர் இடமாறுதல் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

    By மதுரை  |   Published on : 22nd September 2015 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அரசு மருத்துவக்கல்லூரி தடயவியல்துறைத் தலைவரை இடமாறுதல் செய்து சுகாதாரத்துறை செயலர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது.

     மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் தடயவியல் துறைத்தலைவர் ஜி.நடராஜன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா இவ்வாறு உத்தரவிட்டார்.

     மனுவில், பிரேத பரிசோதனைக்கு நான் ஒத்துழைக்கவில்லை என்று மருத்துவக்கல்வி இயக்குநர் மற்றும் எஸ்பி ஆகியோரிடம் ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் 2012இல் புகார் அளித்தார். இந்த புகார்களின் பேரில் மருத்துவக்கல்லூரி டீன் இருமுறை விசாணை நடத்தினார். என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது. என்னை விசாரணைக்கு ஆஜராகும்படி 2013 இல் ஆட்சியர் அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இந்நிலையில் என்னை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு இடமாறுதல் செய்து 2013 ஜூன் 12 இல் சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டார். ஒரே புகாருக்கு இரு முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஆட்சியர் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுத்தது தவறானது. எனவே இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.    

     இம்மனுவை நீதிபதி டி.ராஜா முன்பு விசாரிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, இடமாறுதல் தொடர்பான சுகாதாரத்துறை செயலரின் உத்தரவு, மருத்துவக் கல்வி இயக்குநரின் குற்றச்சாட்டு குறிப்பாணை, பணி விடுவிப்பு தொடர்பான டீன் நடவடிக்கை ஆகியவற்றை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai