Enable Javscript for better performance
வாக்காளர் சேர்க்கை முகாம்: ஒரே நாளில் 17,200 விண்ணப்பங்கள்- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர் சேர்க்கை முகாம்: ஒரே நாளில் 17,200 விண்ணப்பங்கள்

    By  மதுரை  |   Published on : 22nd September 2015 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாமில் 17,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

     இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியது:

     தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் 2016 ஜன.1 ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி செப்.15 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு படிவங்கள் பெறப்பட்டன. மேலும், மாவட்டத்தின் 10 பேரவைத் தொகுதிகளிலும் உள்ள 2,685 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

     இதில், வாக்காளர் சேர்க்கைக்கு (படிவம் 6) 17,200 விண்ணப்பங்களும், நீக்கம் செய்ய 400 மனுக்கள், திருத்தம் செய்ய 850 மனுக்கள், முகவரி மாற்றம் செய்ய 870 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

     புதிய மென்பொருள்: ஒரே வாக்காளர் பெயர் பல தொகுதிகளில் இடம் பெறுவதைக் கண்டறிந்து நீக்கம் செய்ய, புதிய மென்பொருள் தேர்தல் ஆணையத்தால் செப்.24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

     ஒரு தொகுதியில் இருந்து இடம்பெயரும் வாக்காளர், முந்தைய தொகுதியில் இருந்து தனது பெயரை நீக்கம் செய்வது இல்லை. இதனால், பல தொகுதிகளில் பெயர் இடம்பெறும் நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6 கொடுத்துள்ள வாக்காளர்களின் பெயர், வயது, முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்தவுடன் வேறு தொகுதியில் அவரது பெயர் இருக்கிறதா என்பதைக் காண்பிக்கும் வகையில் புதிய மென்பொருள் கொண்டு வரப்படுகிறது.

     அவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் குறித்து அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு, இப்போதைய இருப்பிடம் உறுதி செய்யப்பட்டு பின்னர் பெயர் சேர்க்கப்படும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai