Enable Javscript for better performance
அகில பாரத வழக்குரைஞர் சங்க புதிய பொறுப்பாளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    அகில பாரத வழக்குரைஞர் சங்க புதிய பொறுப்பாளர்கள்

    By மதுரை  |   Published on : 23rd September 2015 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் அகில பாரத வழக்குரைஞர்கள் சங்க கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    கூட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசு வழக்குரைஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமை வகித்தார். அகில பாரதிய பரிஷத்தின் மண்டலச் செயலர் ராஜேந்திரன், ஏபிவிபி வழக்குரைஞர் கே.பழனிக்குமார், மதுரைக் கல்லூரி வாரியம் எஸ்.பார்த்தசாரதி மற்றும் மத்திய அரசு மூத்த வழக்குரைஞர் பி.பால்பாண்டி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் சங்கத்தின் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அவர்கள் விவரம்: தலைவராக ஜே.அழகுராம் ஜோதி, துணைத்தலைவர் சீதாராமன், செயலர் பாலகிருஷ்ணன், துணைச் செயலர் வி.வேலுச்சாமி, பொருளாளர் கே.முரளீதரன்.  செயற்குழு உறுப்பினர்களாக, கந்தசாமி, பாலகிருஷ்ணன், எஸ்.ஆறுமுகம், பி.மாரிமுத்து, தமிழ்ச்செல்வன் ஆகியோரும், சங்கத்தின் மாவட்ட நீதிமன்ற கிளை பொறுப்பாளர்களில் தலைவராக எஸ்.வளர்முருகன், செயலராக அய்யப்பன், பொருளாளராக முத்துராமசுப்பிரமணியன் ஆகியோரும், செயற்குழ உறுப்பினர்களாக 5 பேரும் அறிவிக்கப்பட்டனர்.

    இத்தகவலை மத்திய அரசு மூத்த வழக்குரைஞர் பி.பால்பாண்டி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai