Enable Javscript for better performance
அக்ரி கிருஷ்ணமூர்த்தி உதவியாளருக்கு முன்ஜாமீன்: நெல்லை நீதிமன்றத்தில் கையெழுத்திட உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    அக்ரி கிருஷ்ணமூர்த்தி உதவியாளருக்கு முன்ஜாமீன்: நெல்லை நீதிமன்றத்தில் கையெழுத்திட உத்தரவு

    By மதுரை  |   Published on : 23rd September 2015 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேளாண் அதிகாரியை தற்கொலைக்குத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், வேளாண்துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமீன் வழங்கியது. அவர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

      திருநெல்வேலி மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரியில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். வேளாண்துறையில் ஓட்டுநர்கள் நியமனத்தில் லஞசம் வசூலிக்க அவருக்கு நிர்பந்தம் செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் கூறப்பட்டது.

     இச்சம்பவம் தொடர்பாக வேளாண்துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அத்துறையின் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளரும், ஓய்வு பெற்ற அரசு அலுவலருமான பூவையாவிடம் போலீஸார் விசாரித்தனர். அவர் சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில், பூவையாவையும் போலீஸார் வழக்கில் சேர்த்தனர். இதனால், அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

      இம்மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பூவையாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி முதலாவது  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai