Enable Javscript for better performance
அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உசிலம்பட்டி அருகே சிந்துபட்டியில் செல்லம்பட்டி ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

      கிளைச் செயலர் எம்.ஆர்.வி. ஜெயராமன், ஊராட்சி செயலர் வி.ஆர்.சந்திரன் தலைமை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி பாண்டியம்மாள், கிளை செயலர் இ.பி.வி.ஜெயராமன், பிரதிநிதி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      செல்லம்பட்டி ஒன்றியச் செயலர் ஆர். செளந்திரபாண்டி, மாவட்ட கவுன்சிலர் பி.நீதிபதி ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இ.மகேந்திரன் சிறப்புரை ஆற்றினார்.

     முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியம்மாள் நிறைவுரை ஆற்றினார். இதில் செல்லம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பவளக்கொடி ராசுக்காளை, மாவட்ட கவுன்சிலர் போத்திராஜ், பேரவை துணைச் செயலர் ஒய்.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இளைஞர் பாசறை செயலர் யு.ஆர்.குமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai