Enable Javscript for better performance
இசைபட வாழ்தலே இனிய வாழ்க்கை: தமிழறிஞர் ரா.இளங்குமரனார்- Dinamani

சுடச்சுட

    

    இசைபட வாழ்தலே இனிய வாழ்க்கை: தமிழறிஞர் ரா.இளங்குமரனார்

    By மதுரை  |   Published on : 23rd September 2015 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாழ்க்கையில் இசைபட வாழ்தலே இனிய வாழ்க்கை என தமிழறிஞர் ரா.இளங்குமரனார் கூறினார்.

     மதுரை புரட்சிக் கவிஞர் மன்றம் சார்பில் தமிழிசைப் பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரத்தின் நூற்றாண்டு விழா மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

     விழாவில் வீ.ப.கா.சுந்தரம் திருவுருவப் படத்தை ரா.இளங்குமரனார் திறந்துவைத்து ஆற்றிய சிறப்புரை: இசைபட வாழ்வாரே வாழ்வர் என்பது திருவள்ளுவர் வாக்கு. ஆகவே இசைபட வாழ்தலே இனிய வாழ்க்கையாகும். தமிழானது இயல், இசை, நாடகம் ஆகிய முப்பெரும் கலைகளைக் கொண்டதாகும்.

     முத்தமிழ் கலைகளிலும் வல்லவராகத் திகழ்பவர்கள் ஒரு சிலரே. அதில் பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரனார் முக்கியமானவர். இசை ஆய்வாளராக மட்டுமின்றி, இசைப் பயிற்சியை மேலை நாடுகளிலும் அளித்த பெருமைக்குரியவராக அவர் இருந்தார்.

     குழலிசைக் கோமானாக அவர் திகழ்ந்தார். இசைக் கலைச் சொற்கள் பலவற்றைத் தாமே உருவாக்கி இசை உலகம் பயன்பெறுமாறு இசைப் பேரகராதியை உருவாக்கியவர். இசை அறிஞர்களையும், இசைக் கருவிகளையும் அகர முறையில் பலரையம் அறியச்செய்தவர். அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதன் மூலம் தமிழையும், தமிழிசையையும் பரவச்செய்யலாம் என்றார்.

     நிகழ்ச்சிக்கு தமிழிசை ஆய்வாளர் ந.மம்முது தலைமை வகித்தார். குழலிசைக் கலைஞர் டாக்டர் கோ.பாஸ்கரராஜன், நாடகக் கலைஞர் ராஜா, வேளாண்மை அறிஞர் பாமயன், பேராசிரியர் நோவா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புரட்சிக் கவிஞர் மன்ற தலைவர் பி.வரதராஜன் நினைவுரையாற்றினார்.

     மைத்திரியாழினி வரவேற்றார். தமிழ்முதல்வன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai