கால்நடை தீவன வளர்ப்பு பயிற்சி முகாம்
By உசிலம்பட்டி | Published on : 23rd September 2015 12:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உசிலம்பட்டி எஜூகேட்டர் தொண்டு நிறுவனம் மற்றும் புதுதில்லி சுற்றுச் சூழல் கல்வி மையம் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு பாரம்பரிய முறையில் கால்நடைகளுக்கு தீவனம் வளர்ப்பு, பராமரித்தல், இயற்கை மூலிகை மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொண்டு நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். திட்ட மேலாளர் பொன்ராம் வரவேற்றார். இந்தியன் வங்கி விவசாய மேலாளர் சதீஸ்குமார், சேக்ரட் தொண்டு நிறுவன செயலர் பிச்சை, அன்பு தொண்டு நிறுவன செயலர் பாண்டி ஆகியோரின் முன்னிலை வகித்தனர்.
மதுரை சேவா நிறுவன ஒருங்கிணைப்பாளர் அழகுமலை இயற்கை மூலிகை மருத்துவ முறையின் மூலம் கால்நடைகளை பராமரித்தல் குறித்து பயிற்சி அளித்தார். கே.எஸ்.சி. கால்நடை தீவன பிரதிநிதி ஹரிஹரசுதன், சாரா டிரேடர்ஸ் உரிமையாளர் பாண்டியராஜன் ஆகியோர் கால்நடை தீவனம் குறித்து விளக்கினர்.
முகாமில் கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் பிரேமா ராணி நன்றி கூறினார்.